வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
என்னையா கழட்டி விட்டுட்டு போற?., காதலியை பழிவாங்க ஹோம் தியேட்டரில் பாம் கிப்ட் கொடுத்த காதலன்..! புதுமாப்பிள்ளை பரிதாப பலி..!!
முன்னாள் காதலியை பழிவாங்க ஸ்பீக்கரில் வெடிபொருட்கள் கலந்த காதலனால், புதுமாப்பிள்ளை மற்றும் அவரின் சகோதரர் பரிதாபமாக பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கபிர்தாம் மாவட்டம், சாமிர்தா பகுதியை சேர்ந்தவர் ஹமேந்திர மேராவி (வயது 22). இவரின் சகோதரர் ராஜ் குமார் (வயது 30). இவர்களில் ராஜ் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தை இருக்கிறார்கள். இவர்களின் குடும்பம் கூட்டுக்குடும்பம்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி ஹமேந்திராவுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவர்களின் திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுகளை கடந்த 3ம் தேதி குடும்பத்தினர் ஒவ்வொன்றாக வாங்கி பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, பெயரிடப்படாத பார்சல் ஒன்றை பிரித்து பார்த்தபோது, அதனுள் விலையுயர்ந்த இருந்துள்ளது. இதனையடுத்து, ஸ்பீக்கரை எடுத்த ராஜ்குமார், அதனை டிவியோடு இணைந்துவிட்டு, அதன் அருகில் இருந்தவாறு மின்சாரத்தை வழங்கியுள்ளார்.
அந்த சமயத்தில் ஸ்பீக்கர் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் திருமணமான புதுமாப்பிள்ளை ஹமேந்திரா சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவரின் சகோதரர் ராஜ்குமார் படுகாயத்துடன் துடித்துள்ளார். அவர்களது வீட்டில் இருந்த ஒன்றரை வயது குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணை நடத்தி வழக்குப்பதிந்த காவல் துறையினர், ஸ்பீக்கர் வெடித்த தடயங்களை சேகரித்து வெடிபொருட்கள் உபயோகம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து, அந்த பரிசு கொண்டு வந்தவரை திருமண வீடியோவில் தேடிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. மணப்பெண்ணின் முன்னாள் காதலர் மணமக்களுக்கு பரிசு வழங்கியது அம்பலமானது. இதனையடுத்து, மணப்பெண்ணின் முன்னாள் காதலரான சர்ஜு என்பவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், புதுமணப்பெண்ணான முன்னாள் காதலி தன்னை விட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்த ஆத்திரத்தில், அவரை பழிவாங்க இவ்வாறான செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் சர்ஜுவை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.