கடும் மழையால் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை! நாயை வேட்டையாட முயன்ற முதலையின் பதறவைக்கும் வீடியோ!



crocodile-in-residency-area

குஜராத்தின் வதோதரா நகரில் கடந்த புதன்கிழமை முதல் தொடர் கனமழை பெய்துவருகிறது. இதனால் நகரமெங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றிலிருந்து அடித்துவரப்பட்ட முதலைகள் வீடுகள் இருக்கும் தெருக்களுக்கு வந்ததால் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அப்பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் இரண்டு தெரு நாய்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. அப்போது, அதில் ஒரு நாயின் பின்புறமாக முதலை ஒன்று, நாயை பிடிப்பதற்காக மெதுவாக பின்தொடருகிறது.



 

திடீரென அந்த முதலை, நீரிலிருந்து பாய்ந்து ஒரு நாயை பிடிப்பதற்காக பாய்ந்து செல்கிறது. அதற்குள் சுதாரித்துக்கொண்ட அந்த நாய் நூலிழையில் முதலையிடமிருந்து தப்பித்துக்கொண்டது. இதைக்கண்டு சுற்றியிருக்கும் மக்கள், பதற்றத்தில் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.

இந்தநிலையில், குஜராத்தில் மேலும் சில நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள நிலையில் மேலும் மக்கள் பதட்டத்தில் உள்ளனர்.