#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாமனாரை கொடூரமாக குத்திக் கொன்ற மருமகள்! அதிர வைத்த பகீர் வாக்குமூலம்!
உத்தரபிரதேச மாநிலம் விஸ்ரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்சேனி. இவரது மனைவி குஷ்மா.
இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களில் இரண்டாவது மகனின் மனைவி காமினி.
ராம்சேனி கடந்த சில காலங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலங்களை விற்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு 25 லட்சம் பணம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது மகனின் மனைவி காமினி அதிலிருந்து தனக்கு 10 லட்சம் வேண்டுமென மாமனார் மற்றும் மாமியாரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் மாமியாருடன் இதுகுறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரை அடித்தும் தாக்கியுள்ளார். இந்நிலையில் மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராம்சேனி மருமகளை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காமினி அருகில் இருந்த கத்தியால் மாமனாரை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, ராம்சேனி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்நிலையில் அச்சமடைந்த காமினி வீட்டை விட்டு ஓட முயன்றுள்ளார். ஆனால் அவர்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராம்சேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.