ஃப்ரீசர் பாக்ஸ்ஸில் மாணவியின் உடலை இழுத்துச் சென்ற போலீசார்! தடுத்த தந்தையை காலால் மிதித்து கொடூரம்! பகீர் வீடியோ!



dead-girl-father-attacked-by-police

சங்கரரெட்டி மாவட்டம் மெலிமெலாவில்அமைந்துள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த 16 வயது மாணவி ஒருவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடலை  ஃப்ரீசர் பாக்ஸ் ஒன்றில் வைத்து கல்லூரிக்கு வெளியே வைத்துள்ளது.

 இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோர்கள் தங்களது மகளது  இறப்பில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம்தான் எனது மகளின் இறப்பிற்கு காரணம். அவள் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் எங்களை போனில் அழைத்து பேசினாள். கடந்த சில நாட்களாகவே அவள் மனஉளைச்சலில் காணப்பட்டாள்  எனவும் தெரிவித்துள்ளனர்.

daughter dead

மேலும் தங்களது மகளது இறப்பில் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஃப்ரீஸரில் தைக்கப்பட்ட மாணவியின் உடலை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் ஃப்ரீசர் பெட்டியை வேகமாக இழுத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது அந்த இளம் பெண்ணின் தந்தை அவர்களை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அப்போது காவலர் ஒருவர் மாணவியின் தந்தையை தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளார். இதனை நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தெலுங்கானா டிஜிபி உயிரிழந்த பெண்ணின் தந்தையிடம் மோசமாக நடந்துகொண்ட போலீஸ் அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த மரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.