டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு! டெல்லியின் தற்போதைய நிலை என்ன?



delhi issue death increase


டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியதால், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்தநிலையில் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்ட  ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.

delhi

இதன்காரணமாக டெல்லியில் கடந்த சில நாட்களாக பதற்றமான  சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் நடந்த வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், டெல்லியில் கொஞ்சம் ஓஞ்சமாக அமைதி நிலை திரும்புகிறது. வன்முறை வெடித்த  வடகிழக்கு டெல்லியில் படல இடங்களில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர்.