"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
#BigBreaking: ரசாயன கொசுவர்த்தியால் உறங்கிக்கொண்டிருந்த 6 பேர் மரணம்.. ஒரேநாள் இரவில் நடந்த பயங்கரம்.. மக்களே கவனமாக இருங்கள்.!
கொசுவர்த்தியில் சேர்க்கப்படும் இரசாயனங்களில் சுவாசம் தொடர்பான கோளாறை ஏற்படுத்தும் தன்மை இருக்கின்றன. இவற்றை தொடர்ந்து சுவாசித்தாலோ அல்லது அதிகளவு கொசுவர்த்தியை ஏற்றிவைத்து சுவாசித்தாலோ மரணம் கூட ஏற்படலாம்.
கிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர், உறங்கும்போது கொசுவர்த்திகளை ஏற்றிவைத்து உறங்கியுள்ளனர். அப்போது, கொசுவர்த்தி நள்ளிரவு நேரத்தில் எரியும்போது கார்பன் மோனாக்சைடு வெளியேறியதாக தெரியவருகிறது.
இதனால் உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரின் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு போராடியுள்ளனர். இவர்கள் தட்டுத்தடுமாறி கதவை திறந்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்..
அவசர ஊர்தி மூலமாக 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. இவர்களின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது..
கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன....