மகிழ்ச்சியான செய்தி.! அனைவருக்கும் இலவச தடுப்பூசி.! மத்திய அமைச்சர் அதிரடி.!



free vaccine in india

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், இது குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் இதுவரை பல வகையான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதனையடுத்து இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.  டெல்லியில் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகையை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி  தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனா தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்