"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
11 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி.. அரங்கேறிய பதைபதைப்பு சம்பவம்.!
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயங்கரம் குஜராத் அருகே நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், பாலசனா நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலை செய்து வருவதால், பெற்றோர்கள் வேலைக்கு சென்றதும் சிறுமி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிப். 21 ஆம் தேதி (நேற்று) பெற்றோர்கள் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோது, மகள் வீட்டில் இருந்து மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை தேடியபோது, சிறுமி தனது வீட்டில் இருந்து தொலைவில் உள்ள அறையில் இருந்துள்ளார்.
அறையில் இருந்து அழுகுரல் கேட்ட நிலையில், கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. கதவை உடைத்த பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமியின் உடலில் இரத்தம் வெளியேறியவாறு இருந்துள்ளார். அரைமயக்க நிலையில் உயிருக்கு போராடிய சிறுமியை மீட்ட பெற்றோர், அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, இதுகுறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் 2 பேரை சந்தேகத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர்.