திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முகத்தில் ஆசிட் காயங்களுடன் அரை நிர்வாண உடல்.!! மீண்டும் கூட்டு வன்புணர்வா.? முடுக்கி விடப்பட்ட விசாரணை.!!
மேற்கு வங்க மாநிலத்தில் இளம் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்தப் பெண்ணின் வருங்கால கணவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகத்தில் ஆசிட் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
மேற்குவங்க மாநிலத்தின் ஆஷ்ரம்பூரா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை பந்தலுக்கு அருகே முகத்தில் ஆசிட் காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வருங்கால கணவர் மீது பெற்றோர் புகார்
இந்நிலையில் இறந்த பெண்ணின் பெற்றோர் அந்தப் பெண்ணிற்கு நிச்சயிக்கப்பட்டிருந்த வருங்கால கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அவர்களது புகாரில் தனது வருங்கால கணவருடன் வெளியே சென்ற பெண் வீடு திரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்தப் பெண் அவரது வருங்கால கணவர் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அவரது முகத்தில் ஆசிட் ஊற்றி இருப்பதாகவும் அந்தப் பெண்ணின் பெற்றோர் பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கொலை; நண்பருடன் சேர்ந்து இளைஞர் பயங்கரம்.!
காவல்துறை விசாரணை
இந்தப் புகாரை தொடர்ந்து இறந்த பெண்ணிற்கு நிச்சயிக்கப்பட்ட நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண்ணின் பிரேத பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் எனவும் அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் பணியில் இருந்த மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் ரணங்கள் மறைவதற்குள் மீண்டும் ஒரு அதிர்ச்சியான சம்பவம் அம்மாநிலத்தில் நடைபெற்றுள்ளது மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: #JustIN: மீண்டும் பயங்கரம்.. பயணிகள் இரயில் தடம்புரண்டு விபத்து.. காத்திருந்த அதிஷ்டம்.!