திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: மீண்டும் பயங்கரம்.. பயணிகள் இரயில் தடம்புரண்டு விபத்து.. காத்திருந்த அதிஷ்டம்.!
அகர்தலா - லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இரயில் அசாமில் இன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்து ளைடிங் - பர்தார்பூர் மலைப்பகுதியில் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உதவிக்கு 03674 263120, 03674 263126 ஆகிய எங்களை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசாமில் விபத்தில் சிக்கியது
அசாம் மாநிலத்தில் உள்ள அகர்தலாவில் இருந்து மும்பையை இணைக்கும் வகையில் மும்பை லோகமான்யா திலக் அதிவிரைவு இரயில் சேவை வழங்ப்படுகிறது. இன்று இரயில் மும்பை நோக்கி பயணித்தபோது, அசாம் மாநிலத்தின் தோமா ஹாசாவோ பகுதியில் விபத்தில் சிக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: கைவிட்டுச் சென்ற கள்ளக்காதலன்.. கண்ணீருடன் தவித்த மனைவியை ஏற்றுக்கொண்ட கணவன்.. இப்படியும் ஒரு பாசம்.!
இரயில் விபத்தில் சிக்கிய காட்சிகள்
Agartala–Lokmanya Tilak Terminus Express that left #Agartala today morning derailed at Dibalong station under Lumding division in the Lumding-Bardarpur Hill section at about 15-55 hrs.08(eight)coaches including the power car and the Engine of the train got derailed@DDNewslive pic.twitter.com/e5ckSu9r68
— DD News Tripura (@ddnewsagartala) October 17, 2024
8 பெட்டிகள் தடம்புரண்டன
இரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், நல்வாய்ப்பாக பெரிய அளவிலான சேதம் ஏதும் இல்லை. இன்று மாலை 03:55 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அவ்வழித்தடத்தில் செல்லும் பிற இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை கவரப்பேட்டை பகுதியில் எக்ஸ்பிரஸ் - சரக்கு இரயில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது. இதனிடையே, அசாமில் இரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட 34 வயது பெண்.!! படுகாயங்களுடன் மீட்ட காவல்துறை.!!