மரண பயத்தை நேரில் பார்த்த பாராகிளைடர்ஸ்... பதைபதைப்பு சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வைரல்.!



Heart breaking CCTV footage

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டம் பாராகிளைடிங் செய்ய ஏதுவான இடம் என்பதால், அங்கு பலரும் வந்து பாராகிளைடிங் செய்து மகிழ்வார்கள். இந்த நிலையில், நேற்று 2 பேர் பராகிளைடிங் செய்து கொண்டு இருந்தனர். 

அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக அவர்களின் பாராகிளைடர் மோட்டார் இயந்திரம் பழுதாகி நின்றுவிடவே, நடுவானில் இருந்து கீழ்நோக்கி பாராகிளைடர் பாய்ந்துள்ளது.

சாதுர்யமாக செயல்பட்ட விமானி அதனை இலாவகமாக தரையில் இறக்கி உயிர்சேதத்தை தவிர்த்தார். அதில் பயணம் செய்த 2 பேர் சிறு காயத்துடன் தப்பித்தார். பாராகிளைடர் தரையிறங்கும்போது எதிரில் வந்த காருடன் மோதி நின்றது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.