நாகாலாந்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்து சுக்குநூறாக நசுங்கி சிதறிய கார்... பதை பதைக்கும் வீடியோ காட்சி...!!!



huge-rock-falls-in-nagaland-crushing-hundreds-of-cars-s

நேற்று மாலை நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29 ல் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு கார்கள் மீது விழுந்தது.

பாறைகள் விழுந்ததில் இரண்டு கார்கள் முற்றிலுமாக நொறுங்க 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

பாறாங்கல் உருண்டு விழுந்து கார்கள் நசுங்கிய வீடியோ பார்ப்பவர்களை பதைபதைக்க செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு பிரோ தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- திமாபூர் மற்றும் கோஹிமா இடையே இன்று (நேற்று) மாலை சுமார் 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பாறை விழுந்ததில் இரண்டு பேர் பலி மற்றும் மூன்று பேர் பலத்த காயமடைந்தது உட்பட இந்த சம்பவம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் இந்த இடம் "பகலா பஹார்" என்று கூறப்படுகிறது. அதாவது, நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் விழுவதற்கு இந்த இடம் பெயர் பெற்றது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.