பெத்த மகளை அந்தரத்தில் தொங்கவிட்டு தந்தை செய்த காரியம்! மிரண்டுபோன மனைவி! பகீர் சம்பவம்!!



husband-blackmailed-wife

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மலட் பகுதியில் வசித்து வருபவர் அஜய் கவுட். அவர் மீடியா கம்பெனியில் ஓவியராக வேலை பார்த்து வருகின்றார். இவரின் மனைவி பூஜா. இவர்களுக்கு 13 வயதில், ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.  இந்நிலையில் பூஜா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கணவரோடு சண்டை போட்டுக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அவரது கணவர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் அவர் அவ்வப்போது பூஜாவை தன்னுடன் வாழ வரும்படி போன் செய்து சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால் பூஜாவிற்கு அவருடன் வாழ விரும்பமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கோபமடைந்த அஜய் கவுத் தனது 13 வயது மகளை கயிற்றில் கட்டி, தூக்குக்கயிறு போன்று தொங்கவிட்டுள்ளார். இந்நிலையில் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியுள்ளார். 

மேலும் இதனை புகைப்படமாக எடுத்து அவர் அவரது மனைவிக்கு அனுப்பி மிரட்டியுள்ளார். இந்த நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.