அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
கள்ளக்காதலியை எதிர்த்த மனைவி சயனைடு கொடுத்து கொலை.. கம்பி எண்ணும் கணவன்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் மாவட்டம், கோணிபீடு பகுதியைச் சார்ந்தவர் தர்ஷன். இவரின் மனைவி ஸ்வேதா. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
மேலும் இருவரும் கல்லூரி காதலில் விழுந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக தான் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே பணியிடத்தில் தர்ஷனுக்கு பெண் வேறு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை அறிந்த மனைவி தனது கணவரின் தோழிக்கு தொடர்புகொண்டு தனது கணவருடன் கொண்ட பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்திருக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ளாத கணவர் கள்ளக்காதலியுடன் வாழ ஆசைப்பட்டு மனைவிக்கு உணவில் சயனைடு கலந்துகொடுத்து கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற போலீசார் விசாரிக்கையில், உண்மை அம்பலமாகியதால் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.