ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
ஜோதிடரை நிர்வாணமாக்கி ரௌடி செய்த இழிசெயல்.. திடீரென என்ட்ரி கொடுத்த போலீஸ்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.!

ஊருக்கே ஜோதிடம் சொன்ன நபரின் தலைக்கு கத்தி வந்து திடீரென ரூட்டை மாற்றிய சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. ரௌடி கும்பலிடம் சிக்கிய ஜோதிடர் தப்ப காவல்துறையினரின் எதற்ச்சை வருகை காரணமாகவும் அமைந்தது.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், மஞ்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் மைமூனா (வயது 44). இவர் கடந்த சில ஆண்டுகளாக கூடலூரில் வசிக்கிறார். 2 நாட்களுக்கு முன், மைமூனா மற்றும் வாலிபர் சேர்ந்து, பாலக்காடு, கொல்லங்கோடு பகுதியில் செயல்படும் ஜோதிடரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பெண்மணி தான் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், வீடு பிரச்சனை மற்றும் தோஷத்தை நிவர்த்தி செய்து தரவேண்டும் எனவும் கூறியுள்ளார் .
இதனை நம்பிய ஜோதிடர், இருவரின் வீட்டுக்கு சென்று பூஜை செய்ய ஒப்புக்கொண்டார். ஜோடி கூறிய இடத்திற்கு ஜோதிடர் சென்ற நிலையில், அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, கொலை, வழிப்பறி வழக்கில் தொடர்புடைய பிரதீஷ் (36) என்ற ரௌடியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்க, வீட்டில் 2 பெண்கள் உட்பட 9 பேர் இருந்தனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலி கொடூர கொலை; குடிபோதையில் நடந்த தகராறில் பயங்கரம்.!
சிக்கிக்கொண்ட கும்பல்
அச்சமயம் அதிரடியாக வந்த பிரதீஷ், ஜோதிடரை மிரட்டி வீட்டின் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ப்ரகதீஷ், மைமூனா சேர்ந்து ஜோதிடரை நிர்வாணப்படுத்தி இருக்கின்றனர். பின் மைமூனாவுடன் நிற்க வைத்து வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்புவதாக நான்கரை சவரன் நகை, ரூ . 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.20 இலட்சம் பணம் கேட்டு மிரட்டப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் தற்செயலாக வழக்கு விசாரணைக்காக பாலக்காடு சிற்றூர் காவல்துறையினர் ப்ரதீஷை தேடி வீட்டுக்கு வந்தனர். அதிகாரிகளை பார்த்ததும் அனைவரும் ஓட, ஜோதிடரும் தனது உடைகளை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.போதையில் இருந்த மைமூனா கீழே தவறி விழுந்து சிக்கிக்கொண்டார். மைமூனாவிடம் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது.
தப்பிச் சென்ற ஜோதிடரும் கொழிஞ்சாம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் ஸ்ரீஜேஷ் (வயது 26) என்பவரையும், மைமூனாவையும் கைது செய்தனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயணிகளை ஏற்றுவதில் தகராறு.. ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை.. பேருந்து ஊழியர்கள் வெறிச்செயல்.!