தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
போராட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க.. வாழ்க என கூறிய இந்திய பெண்! கடுப்பான எம்பி மற்றும் பொதுமக்கள்!
கர்நாடக மாநிலம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஓவைசி எம்.பி.யும் அழைக்கப்பட்டு இருந்தார்.
அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு கல்லூரி மாணவி மேடைக்கு வந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேச அழைக்கப்பட்டார். அப்போது, மேடையில் ஏறிய அந்த மாணவி திடீரென்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக, "பாகிஸ்தான் வாழ்க.., வாழ்க" என்று கோஷமிட்டபடி இருந்தார்.
அந்த மாணவி பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதை கேட்டதும் மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், ஓவைசி எம்.பி. உள்ளிட்டோர் மாணவியின் அருகே சென்று, அவர் கையில் இருந்த மைக்கை பிடுங்க முயன்றனர். ஆனால் அவர் மைக்கை கொடுக்க மறுத்து விட்டார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், அவரை பிடித்து அங்கிருந்து அழைத்து சென்றனர். இச்சம்பவத்திற்கு ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணின் கருத்தை மறுத்த அவர், இந்தியா ஜிந்தாபாத் என்பதே தமது கொள்கை என்று கூறினார்.