மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிளஸ் 2 மாணவன் செய்ற வேலையா இது.. சிறுமியை கர்ப்பமாக்கி பெற்றோரை கதறவிட்ட மாணவன்..!
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகுதியில் வசித்து வருபவர் 17 வயது நிரம்பிய சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டி கிராமத்தில் தனியார் பள்ளியில் பயின்று வரும் 12ம் வகுப்பு சிறுவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனால் இவர்கள் இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக உள்ளார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவர்களிடம் கருவை கலைக்குமாறு வற்புறுத்தி உள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த மகளிர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிளஸ் 2 மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.