#Breaking: இஸ்லாமியர் குறித்து அவதூறு.. திமுக சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக புகார்.!



Sivaji Krishnamurthy Against Complaint Received

2026 சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் கொண்டு களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் ஆட்சியை பிடிக்க முற்பட்டு வருகிறார். களப்பணிகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் விஜய் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

சர்ச்சை பேச்சு

இந்த விஷயம் குறித்து திமுக ஆதரவாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொதுமேடையில் பேசினார். சில சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி, ஒருசில தகவலை கூறி அவர் பேசிய வீடியோ வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகியது. மேலும், தொடர் கண்டனத்தால் அவரை பொறுப்பில் இருந்தும் திமுக தலைமை நீக்கி உத்தரவிட்டு இருந்தது.

இதையும் படிங்க: காழ்புணர்ச்சியெல்லாம் இல்லிங்க.. ஆதங்கத்துல பேசிட்டேன்.. வருந்துகிறேன்.. - முன்னாள் திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி.!

Sivaji Krishnamurthy

வருத்தமும் புகாரும்

தான் யாரையும் புண்படுத்து பேசவில்லை. எனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என சிவாஜி வருத்தம் தெரிவித்த வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்தார் நோன்பு குறித்தும், இஸ்லாமியர் குறித்தும் அவதூறாக பேசிய, திமுக முன்னாள் தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் மீது, தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் முஸ்தபா சார்பில், தமிழ்நாடு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விரைவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: காழ்புணர்ச்சியெல்லாம் இல்லிங்க.. ஆதங்கத்துல பேசிட்டேன்.. வருந்துகிறேன்.. - முன்னாள் திமுக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி.!