"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
இரும்பு கம்பியை பெண்ணுறுப்பில், வைத்து 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்.!
பலவந்தப்படுத்தி புதருக்குள் இழுத்து சென்ற கொடூரம்
ஜார்கண்டில் ஜகாடியா தொழிற்சாலை பகுதியில் வசித்து வந்த ஒரு 10 வயது சிறுமியின் வீட்டிற்கு அருகில் விஜய் பஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவ தினத்தில் சிறுமி தன்னுடைய வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது விஜய் பஸ்வான் அந்த சிறுமியை பலவந்தப்படுத்தி அருகில் இருந்த புதர் பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்துள்ளார்.
இரும்பு கம்பியால் பெண்ணுறுப்பில் தாக்குதல்
அது மட்டுமல்லாமல் சிறுமியின் பெண் உறுப்பில் இரும்பு கம்பி ஒன்றை வைத்து பலமாக தாக்கியுள்ளார். இதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வர துவங்கியது. இதை பார்த்ததும் பயந்து போன விஜய் பஸ்வான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க: "வா ஜாலியா இருக்கலாம்..." கானகிரீட் ஸ்லாபல் அடித்து இளம்பெண் கொலை.!! 19 வயது இளைஞர் கொடூர செயல்.!!
சிறுமியின் நிலைமை கவலைக்கிடம்
இது பற்றி போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், விஜய் பஸ்வான் குறித்து அவர்கள் விசாரித்ததில் அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. மேலும், சிறுமியின் தந்தையுடன் அவர் ஒரே கம்பெனியில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தாலும், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்
விஜய் பஸ்வான் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். ஒரு 10 வயது சிறுமிக்கு நடந்த இந்த அநீதி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது போன்ற கற்பழிப்பாளர்களுக்கு சட்டம் கடுமையான தண்டனை வழங்காத வரை இது போன்ற அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி என்பது ஒருபோதும் நடக்காது.
இதையும் படிங்க: அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!