இந்தியாவில் 4 ஆவது கொரோனா அலை.. ஜூன் - அக். வரை எச்சரிக்கை.. மக்களே உஷார்.!



Kanpur IIT Researchers Announce Corona 4 th Wave India June to Oct 2022

கடந்த 2019 ஆம் வருடம் உலகளவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், 2022 வருடம் ஆகியும் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா 3 கொரோனா அலைபரவல்களை சந்தித்துள்ளது. கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் என மாறுபாடு அடைந்த வைரஸினால் பல்வேறு இழப்புகளை மக்கள் சந்தித்துள்ளனர். 

கடந்த வருடம் நவம்பர் மாதத்தின் போது கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் அதிவேகத்தில் பரவினாலும், உயிரிழப்புகள் பயத்தை ஏற்படுத்திய அளவு இல்லை. கடந்த சில வாரமாகவே இந்திய அளவில் பல்வேறு மாநிலத்திலும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், 4 ஆவது கொரோனா அலைக்கான கணிப்புகள் தெரியவந்துள்ளது. 

Kanpur

ஏற்கனவே உலக சுகாதார அமைப்பும் கொரோனா பரவல் என்பது 3 ஆவது அலையுடன் நிறைவு பெற்றுவிட்டது என உலக நாடுகள் என்ன வேண்டாம் என எச்சரித்தும் இருந்தது. இந்த நிலையில், கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் 4 ஆவது அலை இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இந்தியாவில் கொரோனா 4 ஆவது அலை ஜூன் மாதம் 22 ஆம் தேதியில் தொடங்கி, அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வரை பரவும். மக்களின் உடல்நிலை மற்றும் பூஸ்டர் தடுப்பூசியின் நிலைக்கு ஏற்ப மக்களிடம் கொரோனா 4 ஆவது அலை தனது வீரியத்தை வெளிப்படுத்தலாம்.

4 ஆவது அலை உறுதியானதால் 4 மாதங்கள் அதன் தாக்கம் இருக்கும், இந்த 4 ஆவது கொரோனா பரவல் அலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்திய அளவில் உச்சம் அடையாளம் என்றும் தெரிவித்துள்ளனர்.