2 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றவன், சிறை வளாகத்தில் தூக்கிட்டு சாவு..!



karnataka-bangalore-anekal-2-aged-minor-girl-rape-murde

தனது அண்ணனின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காமுகன், சிறையில் வைத்து தூக்கிட்டு உயிரை மாய்த்தான்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனேகல் அத்திப்பள்ளியை எடுத்திருக்கும் நெலூர் கிராமத்தில் வசித்து வந்தவர் தீபு (வயது 31). இவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 25 ஆம் தேதி தனது சொந்த அண்ணனின் 2 வயது மகளை சில நாட்கள் கவனித்துக்கொள்வதாக உடன் அழைத்து வந்து, பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்து என நாடகமாடிய தீபுவின் உண்மையை கண்டறிந்து கைது செய்தனர். விசாரணையில், குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தில் கைதான தீபு, பரப்பன அஹ்ரகார சிறையில் அடைக்கப்பட்டார். 

karnataka

இந்த நிலையில், நேற்று சிறையில் உள்ள கழிவறைக்கு சென்ற தீபு, போர்வையை வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கைதிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் தீபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.