#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல சீரியல் நடிகரை வைத்து ஆபாச படமெடுத்த பெண் இயக்குனர்.. ட்ரைலரை பார்த்து பெற்றோர்கள் செய்த காரியம்.. கண்ணீர் கதறல்.!
சீரியல் நடிகரை மிரட்டி ஆபாச படம் எடுத்த பெண் இயக்குனர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், "சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நான் நடித்து வருகிறேன். என்னை நாயனாக வைத்து பெண் இயக்குனர் வெப்செரிஸ் எடுப்பதாக தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வணங்கினார்.
நானும் நடிக்க ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட நிலையில், தாமதமாக அவர் ஆபாச படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தது தெரியவந்தது. படப்பிடிப்பின் முதல் நாளே என்னை ஆபாசமாக நடிக்க வைத்தார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, ஒப்பந்தத்தை காண்பித்து ரூ.5 இலட்சம் இழப்பீடு கொடுத்து சென்றால் பிரச்சனை இல்லை என்று மிரட்டுகிறார்கள்.
என்னிடம் அவ்வுளவு பெரிய தொகை இல்லை என்பதால், நான் அவர்களின் விருப்பப்படி படத்தில் நடித்தேன். தற்போது அப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படத்தின் டீசரை பார்த்த பெற்றோர், என்னை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்ட்டார்கள். நான் நண்பரின் வீட்டில் தங்கியிருக்கிறேன்.
எனது விருப்பத்தை மீறி நூதனமாக வற்புறுத்தி எடுக்கப்பட்ட அப்படத்தை வெளியிட கூடாது. மாறாக படம் வெப்செரிஸ் வெளியானால் நான் தற்கொலை செய்துகொள்வேன். என்னை ஆபாச படத்தில் நடிக்க வைத்த பெண் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் இயக்குனர் மற்றும் ஓ.டி.டி தளத்தின் மீது வழக்குப்பதிந்து இருக்கின்றனர். இயக்குனர் தனது மீதான குற்றசாட்டு தொடர்பாக விளக்கம் அளித்தபோது, நான் படத்தில் 90 % நிர்வாண காட்சிகள் இருக்கும் என்று கூறியதை ஒப்புக்கொண்டு அவர் நடித்தார் என்று தெரிவித்துள்ளார்.