நிலச்சரிவில் சரிந்த குடும்பம்; வருங்கால கணவரையும் விபத்தில் இழந்த பெண்.! நீங்காத வடுவாக வயநாடு துயரம்.!!
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் சூரல்மலை, அட்டமலை பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு 200 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து இருந்தனர். இந்த விவகாரத்தில் தாய் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் இளம்பெண் சுருதி என்பவர் இழந்து இருந்தார்.
இதனிடையே, அவர் தனது வருங்கால கணவரையும் விபத்தில் இழந்த சோகமான துயரம் நடந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய சுருதி உட்பட 8 பேரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்கள்.
வயநாடு நிலச்சரிவில் தன் குடும்பத்தை இழந்த ஸ்ருதி, நிவாரண முகாமில் தங்கியிருந்த போது தனக்கு உதவிய தன் பள்ளி தோழரான ஜென்சனை திருமணம் செய்ய இருந்த நிலையில், ஜென்சன் விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், ஜென்சனின் உடலை கடைசியாக ஒருமுறை ஸ்ருதி பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது. #Wayanad pic.twitter.com/RyLpo58zAe
— Idam valam (@Idam_valam) September 12, 2024
இதையும் படிங்க: வயலுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் லாரி; விபரீதம் புரியாமல் பெட்ரோலை பிடிக்க முண்டியடித்த மக்கள்.!
விபத்தில் நடந்த சோகம்
தங்களின் பள்ளிக்காலத்தில் இருந்து சுருதி - ஜென்சன் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில், வரும் டிசம்பரில் திருமணம் செய்ய இருந்தனர். இதனிடையே, அவர்களின் குடும்பத்தையும், உடமைகளையும் நிலச்சரிவு பறித்துச் சென்றது.
சுருதிக்கு ஆறுதலாக ஜென்சன் மட்டும் இருந்த நிலையில், கல்பேட்டா பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஜென்சன் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது சுருதி தனக்கு ஆதரவாக இருந்த ஜென்சனையும் இழந்து தனியாக தவித்து வருகிறார்.
இதையும் படிங்க: துயரமே வாழ்க்கையின் முடிவாக அமைந்ததால் சோகம்.. 28 வயது இளம்பெண் விபத்தில் பலி.. குடிகாரனால் நடந்த துயரம்.!