ரம்மியமாய் காட்சிதந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளம்; மழையின் போது காணக்கிடைக்காத காட்சி உள்ளே.!



Madurai Meenatchi AMman Temple Pond 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் கோடை மழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் மக்கள் வெயிலின் தாக்கம் தணிந்து மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தொடரும் மழை

கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளநீரும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், மதுரை மீனாட்சி கோவிலில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் மழை நீர் பல அருவிகளின் கிளைகளில் இருந்து விழுவதைப்போன்ற அசத்தல் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பெய்யப்போகும் பேய்மழை; மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை..!

மதுரை மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி கோவிலுக்கு உலகளாவிய பக்தர்களும் வந்து செல்வார்கள். தமிழர்களின் வரலாறுகளை அறிந்துகொள்ள மிகப்பெரிய தூணாக விளங்கும் மீனாட்சி கோவிலில் இருக்கும் பல கல்வெட்டுகள் காலத்தால் அழியாதவை ஆகும். இதில் இருக்கும் வரலாற்று தகவல்கள் வேறெங்கும் கிடைக்காதவை ஆகும்.  

இதையும் படிங்க: #BigBreaking: 14 மாவட்டத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!