#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்.! பாஜகவிற்கு சவால் விடும் முதலமைச்சர்.!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் தசராவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் வருடாந்திர பேரணி நடந்தது. அந்த பேரணியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பா.ஜ.க. தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது. முன்பெல்லாம், மாற்றுக் காரணி ஏதும் இல்லை என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது உங்களைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமாலும் செய்வார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, எனது அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிவிட்டது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது இந்த அரசு விரைவில் கவிழ்ந்து விடும் எனக்கூறினர். நான் அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள் என மகாராஷ்டிரா முதலமைச்சர் சவால் விடுத்துள்ளார்.