#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிக்னலில் காத்திருந்தபோது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பரபரப்பான வீதியில் பகீர் செயல்.. அதிர்ச்சியில் பதறிப்போன பெண்மணி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மலாட் பகுதியில் 40 வயதுடைய பெண்மணி ஆட்டோ ரிஃசாவில் மலாட் இரயில் நிலையம் நோக்கி பயணம் செய்தார்.
அப்போது, அங்குள்ள ஜெயின் கோவில் சிக்னல் பகுதியில் செல்கையில், இளைஞர் ஒருவர் விரைந்து வந்து பெண்ணிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டு சிக்னல் நீக்கப்பட்டபோது தப்பி சென்றார்.
சர்ச்சைக்குரிய நபர் பெண்ணின் அந்தரங்க பகுதிகளை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த பெண்மணி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு இளைஞரை கைது செய்தனர். விசாரணையில், அவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருவது உறுதியானது.
சர்கோப் பகுதியில் அவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். குற்றவாளியின் மனைவி சொந்த ஊரில் வசித்து வருகிறார். கைதுக்கு பின்னர் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.