வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பூண்டு திருடியதால் பயங்கரம்: தொழிலாளியை அடித்தே கொலை செய்த மளிகைக்கடை உரிமையாளர்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போரிவலி பகுதியை சேர்ந்தவர் கன்ஷ்யாம் அகாரி (வயது 56). இவர் மளிகைக்கடை வைத்து அந்தாதி வருகிறார்.
இவரின் நிறுவனத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பங்கஜ் மண்டல் என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அவ்வப்போது சிறுசிறு மளிகைக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வெங்காயம், பூண்டு ஆகிய பொருட்களை திருடியதாகவும் தெரியவருகிறது.
இதனை கவனித்த உரிமையாளர், பங்கஜ்ஜை கண்டித்து இருக்கிறார். இந்நிலையில், நேற்று இரவு 20 கிலோ பூண்டு மூடையை கடையில் இருந்து திருட முயற்சித்தபோது, உரிமையாளர் கன்ஷியாமிடம் பங்கஜ் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், ஆத்திரமடைந்த கன்ஷியாம், ஊழியர் பங்கஜஜை கொடூரமாக கொலை செய்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவலை அறிந்த காவல் துறையினர், பங்கஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மளிகைக்கடை உரிமையாளர் ககன்ஷியாம் அகாரியை கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.