கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.! சென்னையில் விபரீதம்.!
சென்னையில் கூகுள மேப்பை பார்த்து கார் ஓட்டி வந்த ஒரு பெண் 7 பேர் மீது காரை ஏற்றி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் உறக்கம் :
சென்னையில் அசோக் நகர் 10வது தெருவில் சரிதா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் நடந்த விசேஷத்திற்காக அவரின் உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர். இரவு நேரத்தில் வீட்டில் அனைவருக்கும் உறங்க இடம் பற்றவில்லை.
தூங்கியவர்கள் மீது ஏறிய கார் :
இதன் காரணமாக, உறவினர்களில் சிலர் வீட்டிற்கு முன்பு இருந்த ஒரு குறுகிய சாலையில் படுத்து உறங்கியுள்ளனர். இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வைஷாலி எனும் இளம் பெண் அதிகாலை நேரத்தில் 4 மணிக்கு அந்த வழியில் வந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிவிட்டு நிற்காமல் கூட சென்றுள்ளார்.
இதையும் படிங்க: கூகுள் மேப்பால் நேர்ந்த விபரீதம்.. கொட்டிய கனமழையில் வழித்தவறி காரை ஆற்றில் இறக்கிய இளைஞர்கள்.. மூச்சுத்திணறி பலியான சம்பவம்..!
கூகுள் மேப்பால் விபரீதம் :
ஆனால் தெரு முனையை அவரால் கடக்க முடியவில்லை. ஏனெனில், அது முட்டு சந்து. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஓடிச்சென்று அந்த பெண்ணை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் நான் கூகுள் மேப்பை பார்த்து கொண்டு கார் ஓட்டி வந்ததால் தான் இது நடந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
மது போதையில் பெண் :
ஆனால், அங்கிருந்தவர்கள் கொடுத்த புகாரில் அந்தப் பெண் மது போதையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக காரில் அடிபட்ட யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆற்றுக்குள் காரை பாயவிட்ட கூகுள் மேப்: 2 மருத்துவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி.!