மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மரத்தடியில் கல்லூரி மாணவியை மனைவியாக்கிய காதலன்; வீட்டை கொளுத்தி சம்பவம் செய்த தந்தை.!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் மாவட்டம் இடிகாலப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சர்பாஞ்ச் ரவீந்தர். இவரின் மகள் காவியா கல்லூரியில் பயின்று வருகிறார். அதே பகுதியைச் சார்ந்தவர் பிரேமா ரஞ்சித். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் காதல் திருமணத்தால் ஆத்திரத்தில் இருந்த காவியாவின் தந்தை ரஞ்சித்தின் வீட்டை அடித்துநொறுக்கி தீ வைத்திருக்கிறார். இந்த சம்பவத்தில் ரஞ்சித்தின் நண்பர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் உடைமைகளும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவிவரவே, காவல்துறையினர் பாதுகாப்பு கருதி குவிக்கப்பட்டுள்ளனர்.
காதல் ஜோடிகள் இருவரும் கோவில்வளாகத்தில் உள்ள மரத்தடியில் வைத்து மாலை மாற்றி ஒரு நண்பர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.