#WATCH |  ராட்சஸ பாறை உருண்டு நொடிப்பொழுதில் அரங்கேறிய துயரம்..!  நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி..!!



Massive rock accident in nagaland

நேற்று  அதிகாலை நாகாலாந்தின் திமாபூரில் உள்ள சுமோகெடிமாவில் பெரிய பாறை ஒன்று காரை உடைத்ததில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

 நாகாலாந்தின் திமாபூரில் உள்ள சுமோகெடிமாவில், மலையோரத்தில் உள்ள சாலையில் வாகனங்கள் நின்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மிக பெரிய ராட்சத பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு, சாலையில் நின்றுகொண்டிருந்த கார்களை நசுக்கி சென்றுள்ளது.

எதிர்பார்த்த இந்த கோர சம்பவத்தில், 2 பேர் சம்பவ இடத்திலே  உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது குறித்து காவல்துறை இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.