"என்னம்மா இப்படி பண்றீங்களேமா.?" இன்ஸ்டா நண்பரை அலேக்காக தூக்கிச் சென்ற மிரட்டிய சிறுமி.!



minor-girl-kidnapped-her-insta-friend-and-black-mailed

பீகார் மாநிலத்தில் தன்னை பார்க்க வராத நண்பனை மைனர் சிறுமி கடத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமி உட்பட நான்கு பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்தவர் ரிஷப். இவர் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஜெஇஇ தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் மைனர் சிறுமி ஒருவர் அறிமுகமானார். இருவரும் நட்புடன் பழகி வந்தனர்.

India

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி மாணவர் ரிஷபை சந்திக்க  வேண்டும் என சிறுமி விருப்பம் தெரிவித்திருக்கிறார். அந்த நேரத்தில் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்ததால் மாணவரால் செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி தனது நண்பருடன் சிறுமையை சந்திக்க சென்று இருக்கிறார் ரிஷப். பிறகு நண்பனை போக சொல்லிவிட்டு அவர் மட்டும் சிறுமியை சந்தித்து இருக்கிறார்.

India

அப்போது சிறுமி மட்டும் அவருடன் வந்த மூன்று நபர்கள்  ரிஷபை கடத்திச் சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். பிறகு அவரது பெற்றோருக்கு போன் செய்து உங்கள் மகனை கடத்தி வைத்து இருக்கிறோம் 50 லட்ச ரூபாய்  பணம் கொடுத்தால் அவரை விட்டு விடுவோம் இல்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷபின் பெற்றோர் காவல் துறையில் புகார் செய்தனர். காவல்துறையினர் ரிஷபின் செல்போன் அழைப்புகளை பரிசோதித்து பார்த்தபோது  இந்த சிறுமியிடம் நீண்ட நேரம் உரையாடி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் செல் போன்  நம்பரை  வைத்து  அவர்கள் பதுங்கி இருந்த  இடத்திற்குச் சென்று ரிஷபை மீட்டது விசாரணை குழு. மேலும் இது தொடர்பாக சிறுமி மற்றும் அவருக்கு உதவியும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதற்காக  மாணவர் ரிஷப் கடத்தப்பட்டார் என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.