வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இளம்பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் போலி மருத்துவர்.! பரிதாபமாக உயிரிழந்த தாய் மற்றும் குழந்தை.!
உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் 27 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு கடந்த திங்கட்கிழமை பிரசவத்திற்காகச் சென்றுள்ளார். ஆனால் அந்த தனியார் கிளினிக்கில் பிரசவத்தின்போது தாயும், குழந்தையும் இறந்துவிட்டனர். இந்தநிலையில் பிரசவம் பார்த்த அந்த பெண் மருத்துவர், உயிரிழந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்களை கிளினிக்கிற்கு வெளியே வைத்துவிட்டு கிளினிக்கை பூட்டிவிட்டுச்சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர், விசாரணையில் பிரசவம் பார்த்த அந்த அந்த மருத்துவர் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் அந்த கிளினிக் அரசு அங்கீகாரம் பெறவில்லை என்பதும், பிரசவம் பார்த்த பெண் போலி மருத்துவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவான அந்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். மேலும் அரசு அங்கீகாரம் பெறாத அந்த கிளினிக்கை போலீசார் சீல் வைத்தனர். போலி பெண் மருத்துவர் செய்த செயலளால் பிரசவத்தின்போது தாயும், குழந்தையும் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.