நொடியில் பயங்கரம்; காரின் மீது ராட்சத கல் உருண்டு 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!



nagaland-highway-giant-rock-killed-2

 

வடமாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக பல இடங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கோடையில் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட மக்கள், தற்போது மழையின் தாக்கத்தை எதிர்கொள்ள தொடங்கியுள்ளனர்.

நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபுர், சுமெளகெடிமா பகுதியில் வாகனங்கள் பயணம் செய்துகொண்டு இருந்தன. அப்போது. வழியில் மழை குறுக்கிட்டது. 

மேலும், நிலச்சரிவு அபாயமும் இருந்ததால், வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் காரின் மீது பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 நபர்கள் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேற்கூறிய அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளன. சி.சி.டி.வி கேமிரா பதிவின்படி, விபத்து மாலை 5 மணிக்கு மேல் நடந்துள்ளது. அத்துடன் மன தைரியம் இல்லாத யாரும் இந்த வீடியோவை காண வேண்டாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.