வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணின் கணவர் கொலை; ஊராட்சிமன்ற தலைவர் கைது.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல் (45). மனைவி செல்வி (36). தம்பதிகளுக்கு 17 வயது மகள் இருக்கிறார்.
கள்ளக்காதல் பழக்கம்:
செல்விக்கும் - அதிமுகவை சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட கந்தசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கணவர் கொலை:
இந்த தகவல் பழனிவேலுக்கு தெரியவந்து, அவர் மனைவியிடம் அவ்வப்போது தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி பழனிவேலை கடந்த மே 2 ம் தேதி கொலை செய்தது.
மூவர் கும்பல் கைது:
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தற்போது செல்வி, கந்தசாமி மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த ரவி ஆகியோரை கைது செய்தனர்.