வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
இனி வீட்டிலிருந்தே, ஓட்டுப்போடலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
தெலுங்கானா மாநிலத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற தேர்தல் அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வாக்குகளை வீட்டில் இருந்தவாறு பதிவு செய்து கொண்டனர். வரும் நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கின்றது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறைகள் பலவும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யும் முறையானது அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை அடுத்து முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தெலுங்கானா மாநில தேர்தல் அலுவலர்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்து கொண்டனர்.
வரும் நவம்பர் 29ஆம் தேதி வரை இதுபோல ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தேர்தல் அலுவலர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாக்குகளை பதிவு செய்வார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.