வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
உயிர் போவதை நேரில் பார்த்திருக்கிறீர்களா! இதோ நேரில் நடந்த மரண சம்பவம் - வீடியோ உள்ளே.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு நேற்று முதல் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாடகர் ஒருவர் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் ஜெர்ரி பஜ்ஜோடி.
பிரபல கொங்கனி இசை அமைப்பாளர் மற்றும் பாடகரான அவர் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மங்களூரில் உள்ள பேஜாய் பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
அப்பொழுது அவர் மேடையில் கன்னட பாடல் ஒன்றை அவர் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி சரிந்து விழுந்தார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Video: Popular Konkani singer Jerry Bajjodi, 51, collapses while performing at a Ganeshotsava celebration in Mangaluru on Tuesday. He was declared brought dead at hospital. pic.twitter.com/dOT65FbHDG
— TOI Mangaluru (@TOIMangalore) September 4, 2019