"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
லாரி - இருசக்கர வாகனம் மோதி விபத்து; இளைஞர் பரிதாப பலி.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பிரம்மதேசம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லப்பிள்ளை. இவரின்மகன் சௌந்தரசீலன். நேற்று சௌந்தரசீலன் தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டு இருந்தார்.
பரிதாப பலி
அச்சமயம், இருசக்கர வாகனத்தின் மீது, அவ்வழியே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சௌந்தரசீலன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சௌந்தரசீலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: #கடலூர்: கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை; அலறித்துடித்த தொழிலாளி.!
லாரி ஓட்டுநர் கைது
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநராக துறையூர், பாலகிருஷ்ணாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூபதி (வயது 53) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்.! மூன்று வாகனங்கள் அடுத்தடுத்ததாக மோதி கோர விபத்து!!