#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிசை மாற்று வாரிய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. சக அதிகாரிகள் அட்டகாசம்.!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பூமியான்பேட்டை பகுதியை சேர்ந்த 50 வயது பெண், அரசு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பணியிடத்தில் பெண்ணுக்கு அவருடன் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக பெண் பாதுகாப்பு விசாரணை குழுவுக்கு புகார் அளிக்கவே, புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 50 வயது பெண்ணின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள், அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணை தூண்டிவிட்டு சாதி ரீதியாக திட்டியதாக பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக ஜாமின் பெற்ற 50 வயது பெண், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பணிக்கு வந்துள்ளார். தினமும் அவரை அதிகாரிகள் தொந்தரவு செய்து வந்த நிலையில், நேற்று அளவுக்கு அதிகமான மாத்திரையை சாப்பிட்டு வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.