கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தேர்வு எழுத சென்ற மாணவிக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை... காவல்துறையின் அதிரடி நடவடிக்கை.!
மும்பையில் புறநகர் ரயிலில் தேர்வு எழுதி சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போர்ட்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 8 மணி நேரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையை பொதுமக்கள் பாராட்டினர்.
மும்பையில் தேர்வு எழுதுவதற்காக 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் சி எஸ் எம் டி ரயில் நிலையத்திலிருந்து வேலாப்பூர் செல்லும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பெண்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டியில் ஏறினார். அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் வேறு பெண்கள் யாரும் இல்லை . இந்தப் பெண் மட்டுமே தனியாக பயணம் செய்திருக்கிறார்.
அந்த நேரத்தில் ரயில்வே பாதுகாவலர்களும் ரயில் பெட்டியில் இல்லை. அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் அந்த ரயில் பெட்டியில் ஏறி இந்தப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரயில் மஜீத் பந்தர் ரயில் நிலையம் ரயில் நிலையம் வந்த போது ஆடவரிடமிருந்து தப்பித்து அப்பெண் ரயிலை விட்டு கீழே இறங்கி ஆண்கள் பயணம் செய்யும் பொதுப்பெட்டியில் ஏறினார். கல்லூரி மாணவி பதட்டத்துடன் இருப்பதை பார்த்த நபர் ஒருவர் ஏதேனும் உதவி தேவையா எனக் கேட்டுள்ளார். அப்போது இந்தப் பெண் நடந்ததை கூறியிருக்கிறார். உடனே ரயில்வே காவலர்களை தொடர்பு கொண்ட அவர் இந்தப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை பற்றி விவரித்துள்ளார்.
உடனடியாக இரண்டு பெண் காவலர்களை அனுப்பி வைத்திருக்கிறது கட்டுப்பாட்டு அறை. அந்தப் பெண் காவலர்களும் மாணவியை தேர்வு எழுதும் மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தேர்வு மைய அதிகாரிகளிடம் நடந்ததை மாணவி விவரித்துள்ளார். உடனடியாக அவர்களும் வேறு ஒரு நாளைக்கு மாணவிக்கு தனியாக தேர்வு வைப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியை சிஎம்ஐடி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்த ரயில்வே போலீசார் மாணவரிடம் இருந்து முறையாக புகார் பெற்றுக் கொண்டனர். மேலும் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து நடந்த கொடுமைகளைப் பற்றி விவரங்களையும் தெரிந்து கொண்டனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை பற்றிய சிசிடிவி காட்சிகளின் மூலம் கண்டறிந்து மஜித் பந்தர் ரயில் நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்த அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சார்ந்த நவாஸ் கரீம்(40) என்று தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த நபரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.