#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு தெரியுமா? விழிபிதுங்கிய பொதுமக்கள்!.
பாரத பிரதமர் நரேந்திர மோடி சொந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபையில் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம் பேசுகையில், பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ட்ரதற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் இதுவரை மோடியின் வெளிநாட்டு பயண செலவுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று உள்ளார்.
இதற்காக அரசுக்கு ரூ.2,012 கோடி செலவாகி இருக்கிறது. மோடி பயணம் செய்த தனி ஏர்இந்தியா விமானத்துக்கு பராமரிப்புக்கு மட்டும் ரூ.1,583 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.