சம்பளம் கேட்ட தலித் இளைஞரை அடித்து, செருப்பு மாலை அணிவித்த கும்பல்.. ஊதியம் கேட்டவருக்கு ஊதாரி கும்பல் அடாவடி செயல்.! 



Rajasthan Dalit Man Attacked by Gang

 

எலெக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் தலித் சமூகத்தை சேர்ந்தவரை சிறுநீர் குடிக்க வைத்து செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிரோஹி மாவட்டத்தை சேர்ந்த தலித் இளைஞர் பாரத் குமார் (வயது 38). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். அவரின் வேலைக்காக ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். 

ஆனால், அவரின் ஊதிய தொகையில் ரூ.21 ஆயிரம் என எழுதியவர்கள், சம்பவத்தன்று ரூ.5 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கி இருக்கிறார்கள். இதனால் கடந்த நவமபர் 19ம் தேதி அவர் மீத தொகையை கேட்க சென்றுள்ளார். 

அவரை இரவு 9 மணிக்கு வரச்சொன்ன கும்பல், 10 மணிவரையிலும் பணம் கொடுக்காமல் காத்திருக்க வைத்துள்ளது. இதனால் பொங்கியெழுந்த பாரத் குமார் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என தெரிவித்துள்ளார். 

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த எதிர்தரப்பு பாரத்தை பிறருடன் சேர்ந்து தாக்கி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து வீடியோ எடுத்துள்ளது. 5 மணிநேரம் அவரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை செய்துள்ளனர். 

மனமுடைந்துபோன பாரத் குமார் யாரிடமும் எதையும் கூறாமல் இருந்து வந்த நிலையில், அவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.