#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மகனை கட்டி தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை செய்த தந்தை.. கொடூரத்தின் உச்சம்.!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தப்பி பகுதியை சார்ந்த 8 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளான். சிறுவன் வீட்டுப்பாடம் சரியாக செய்யாமல் இருந்ததாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளார்.
இந்த செயலுக்கு தாயும் உடந்தையாக இருந்த நிலையில், சிறுவன் பதறியபடி தாய்-தந்தையிடம் தன்னை விட்டுவிடும்படி கதறியும் பலனில்லை. சிறுவனை குச்சியை கொண்டு தாயும் - தந்தையும் தாக்கி இருக்கின்றனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் கடந்த நவ,17 ஆம் தேதி நடந்த நிலையில், வீடியோ சில நாட்களுக்கு பின்னர் இணையத்தில் வெளியாகியுள்ளது. விடியோவை பார்த்த மாநில குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதில் குழந்தையின் தந்தை அவரின் 5 வயது மற்றும் 8 வயது மகனை இவ்வாறு துன்புறுத்துவது உறுதியானது. அவர் மிகவும் ஆத்திரக்காரர் என்பது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் நல அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் மூன்று நாட்களுக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.