2 பெண்கள் பேசி வெளியான ஆடியோ.! பிரபல சாமியார் எடுத்த விபரீத முடிவு.!



samiyar commit suicide

கர்நாடாக மாநிலம் பெலகாவி மாவட்டம் பைலஹோங்கலா பகுதியில் நெகிலஹலா என்ற லிங்காயத்து மடத்தின் மடாதிபதியான சுமாவி பசவ சித்தலிங்கா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவரது அறையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது மரணத்திற்கு நானே பொறுப்பு. எனது மரணம் தொடர்பாக யாரிடமும் விசாரிக்க வேண்டாம். இந்த உலகில் வாழ விருப்பம் இல்லை. அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மடத்தின் நிர்வாகிகள், பக்தர்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். மடத்தின் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் மடத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று எழுதி உள்ளார்.

மடாதிபதியின் தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை பற்றி 2 பெண்கள் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று வைரலானதால் தனது பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டதாக கருதி சாமியார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சமீபத்தில் சித்தரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தின் மடாதிபதி ஒருவர் பள்ளி மாணவிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதேபோல் இரு பெண்கள் பல மடாதிபதிகள் மீது புகார்களை தெரிவிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உயிரிழந்த சித்தலிங்கா சாமியார் பெயரும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.