#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆள்மாறாட்டம்... நீட் தேர்வில் மோசடி செய்த எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்.! காவல்துறை அதிரடி விசாரணை.!.!
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக டெல்லியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் நான் எங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மேலும் சிலர் சிக்குவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த 4 மாணவர்கள் இந்த ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ மாணவர்களான மகாவீர் மற்றும் உபேந்திரா ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதற்கு மூளையாக செயல்பட்ட நரேஷ் பிஷ்னோய் என்ற மாணவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இவர்களைத் தவிர ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத சென்ற சஞ்சீவ் யாதவ் என்ற மாணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக நரேஷ் பிஷ்னோய் அளித்துள்ள வாக்கு மூலத்தில் தேர்வு எழுதுவதற்காக 7 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக தெரிவித்திருக்கிறார். முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் வாங்கியதாகவும் தேர்வு முடிந்தவுடன் மீதி இருக்கும் 6 லட்ச ரூபாயை வாங்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ஆல்மாராட்டம் மோசடி குறித்து தெரிவித்திருக்கும் காவல்துறை இந்த சம்பவத்தில் மேலும் பலர் நீக்குவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.