#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கடவுளே.. கடும் பனிப்பொழிவில் சிக்கிய 900 பயணிகள்.. மீட்பு பணியில் அதிகாரிகள்..!!
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. அங்குள்ள நாதுலா மற்றும் சோம்கோ ஏரிக்கு சுமார் 89-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் சுற்றுலா சென்றனர்.
இந்த வாகனங்களில் மொத்தமாக 900 பயணிகள் பயணம் செய்த நிலையில், அவர்கள் அனைவரும் பனியில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து ராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், 15 வாகனங்களில் சென்றவர்களை முதற்கட்டமாக மீட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.