#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நாகப்பாம்பு கடித்து கோமா நிலைக்குச் சென்ற சுரேஷ்.! ஒட்டுமொத்த மக்களும் பிரார்த்தனை.! தற்போது அவர் எப்படி உள்ளார்.?
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் கோட்டயம் மாவட்டத்தின் குறிச்சி என்ற இடத்தில் நாகப்பாம்பு ஒன்றை பிடித்து சாக்குப் பையில் போடும்போது சுரேஷை அந்த பாம்பு தொடையில் கொத்தியது
இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சுயநினைவின்றி இருப்பதாக தகவல் வெளியாகியது. சுரேஷை பாம்பு கொத்திய வீடியோவும் இணையத்தில் தீயாய் பரவியது. பாம்பு பண்ணையில் அரசுப்பணி கிடைத்தபோதிலும் அதனை நிராகரித்த சுரேஷ், பாம்புகளிடம் இருந்து மக்களை காப்பதே தனது முதற்பணி எனக் கூறியவர்.
Omg. Looks like a King Cobra. While other snake catchers charge a minimum of Rs 1500 even to visit and check an alert (I had to call one in Tvpm in Sep 21), Vava Suresh happily takes only what people give him. But dangers like this are so part of the job. Hope he recovers soon. https://t.co/By5GPhNJWh
— Ananthakrishnan G (@axidentaljourno) January 31, 2022
இதனால் பொதுமக்கள் பலரும் சுரேஷ் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில், சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் தற்போது வென்டிலேட்டர் உதவி இல்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் மருத்துவர்கள், செவிலியர்களிடம் பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.