தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நானே விசாரிக்கிறேன்.. மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு.! மத்திய அமைச்சர் கண்டனம்.!
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக கடந்த 7ம் தேதி ஒரு தம்பதியினர் தங்களது 10 வயது மாற்றுதிறனாளி மகனுடன் வந்துள்ளனர். அந்த சிறுவன் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளால் சற்று பதற்றமாகக் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர்கள் அவரை அமைதிப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
இதனையெல்லாம் கண்ட இண்டிகோ நிறுவன ஊழியர் ஒருவர், சிறுவனை விமானத்தில் ஏற மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த சிறுவனால் மற்ற பயணிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் ஊழியர்களிடம் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு வாதாடியுள்ளனர். மேலும் அவர்களுக்கு அங்கிருந்தவர்களும் ஆதரவாக பேசியுள்ளனர். ஆனாலும் அவர் மறுத்துள்ளார்.
Here is the video of the incident that happened at Ranchi airport where @IndiGo6E airlines denies boarding to a special need child along with his child.
— Dibyendu Mondal (@dibyendumondal) May 8, 2022
Seems lack of empathy from Indigo staff, not the first time though.
Indigo to issue a statement shortly. @JM_Scindia https://t.co/5ixUDZ009a pic.twitter.com/SyTNgAQIT6
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெருமளவில் வைரலானது. இந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனங்கள் கிளம்பியது. இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமான ஊழியரின் இந்த நடத்தை சகிப்புத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. இதை எளிதாக கடந்து செல்ல வேண்டியதில்லை. இதுகுறித்து நானே விசாரிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரக தலைவர் அருண்குமார், இதுகுறித்து இண்டிகோ நிறுவனத்திடமிருந்து ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.