கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஜீவனாம்சம் கேட்ட மனைவி; நைசாக பேசி அழைத்துச் சென்று போட்டு தள்ளிய கணவன்..!
ஜீவனாம்சம் கேட்ட மனைவியை கொன்ற வாலிபர் கைது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் நகர் பம்ப்ஹவுஸ் பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஷ் (37). இவரது மனைவி அஸ்வினி (36). இவர்கள் 17 வருடங்களுக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்துகொண்டனர். இருவருக்கும் 15 வயதில் ஒரு மகள் மற்றும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் மருந்து கடை நடத்தி வந்த ஜெகதீசுக்கு நஷ்டம் ஏற்பட்டதால், சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் பணப்பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே சன்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அஸ்வினி ஜெகதீசனை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தார். மேலும், தங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று ஜெகதீசன் மீது நீதிமன்றத்தில் அஸ்வினி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அஸ்வினிக்கு மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், அஸ்வினியிடம் சமாதானம் பேசுவது போல் வீட்டுக்கு அழைத்து வந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அஸ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஜெகதீசை பேளூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.