வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
மனைவியின் நடத்தையில் சந்தேகம்; துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்த கொடூரம்... கணவர் கைது..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிளாஸ் போர் மாவட்டத்தில் இருக்கும் உசிலாப்பூர் பகுதியில் வசிப்பவர் பவன் சிங் தாகூர் இவரது மனைவி சதி சாஹு. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் சமீப காலமாக பவன் தாக்கூருக்கு மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த தகராறில் பவன் சிங் தாகூர், ஆத்திரத்தில் மனைவி சதியை கொலை செய்துள்ளார். அவரின் உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி வீட்டு மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, தண்ணீர் தொட்டியில் சாஹு சதியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி, தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்திருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் காவல்துறையினர் பவன் தாகூரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.