#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாலிவுட்டிலும் வேலையை காட்டியுள்ள தமிழ் ராக்கர்ஸ்; கலக்கத்தில் திரையுலகினர்.!
ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மணிகர்ணிகா என்ற பாலிவுட் படம் தற்போது தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளதால் திரையுலகினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.
சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் மணிகர்ணிகா. கடந்த 25ம் தேதி வெளியான இப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையான கங்கனா ரணாவத் ஜான்சிராணியாக இப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியான சில தினங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் வெளியானதால் படக்குழுவினர் அனைவரையும் மிகுந்த கவலை அடைய செய்துள்ளது.
இதுவரை தமிழ் திரையுலகினருக்கு மட்டுமே சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தமிழ் ராக்கர்ஸ் தற்போது தமிழை தாண்டி பாலிவுட்டிலும் தங்களது சேட்டைகளை ஆரம்பித்துள்ளதால் இந்திய சினிமாவே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.